டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியா வர மறுத்த வங்கதேச அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி கறுப்புப் பட்டை அணிந்து விளையாடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் பிசிபி (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி இடையேயான சந்திப்பிற்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், வங்கதேசத்திற்கு ஆதரவாகப் போட்டியில் சில போராட்டங்களை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி (ICC) நிராகரித்த நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரே நாடாகப் பாகிஸ்தான் களமிறங்கியுள்ளது.
இதனால் வரும் வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை பாகிஸ்தான் தனது இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
