நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அபிஷேக் சர்மா வெறும் 20 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரள வைத்துள்ளார். 150-க்கும் மேற்பட்ட ரன்கள் இலக்கை வெறும் 10 ஓவர்களிலேயே இந்தியா எட்டிப்பிடித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! அபிஷேக் சர்மாவின் இந்த அதிரடியைப் பார்த்து மிரண்டு போன நியூசிலாந்து வீரர்கள், அவர் பேட்டில் ஏதாவது ‘ஸ்பிரிங்’ இருக்கிறதா என்று செக் பண்ணும் வீடியோ இப்போது செம வைரல்.
Yesterday, New Zealand players were checking Abhishek Sharma’s bat after the match.
I don't recall any other player’s bat being checked like this
The last time I remember opposition players checking a bat was during Sachin Tendulkar's era
— Space Recorder (@1spacerecorder) January 26, 2026
யுவராஜ் சிங்கின் சாதனையைத் தகர்க்கும் வேகத்தில் (14 பந்துகளில் அரைசதம்) ஆடும் இந்த இடதுகை பேட்ஸ்மேன், டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணிக்கு ஒரு பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளார். ஏற்கனவே ஒருநாள் தொடரில் தோற்ற சோகத்தில் இருந்த பயிற்சியாளருக்கும், ரசிகர்களுக்கும் சூர்யகுமார் யாதவ் மற்றும் அபிஷேக் சர்மாவின் இந்த கூட்டணி மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. நியூசிலாந்து வீரர் மார்க் சாப்மேனே, “இவரைத் தடுப்பது ரொம்ப கஷ்டம்” என்று பாராட்டும் அளவுக்கு நம்ம பையன் பட்டையைக் கிளப்பிட்டாரு!
