உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்தது. தேர்தல் முடிவின் வாக்கு எண்ணிக்கைகள் உடனே நடத்தப்பட்டடு கமலா ஹாரிஸை விட தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் இருந்தார். டொனால்ட் ட்ரம்ப் 295 எலக்ட்ரால் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபராக ஆனார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி டொனால்ட் ட்ரம்ப் யு.எப்.சி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் யூ.எப்.சி வீரர் கபிப் டொனால்ட் ட்ரம்பிடம் பாலஸ்தீன போரை நிறுத்துமாறு கூறியுள்ளார் அதற்கு பதில் அளித்த ட்ரம்ப் நாம் நிறுத்துவோம் என கூறியுள்ளார். கடந்த ஓராண்டுக்கு மேலாக தொடர்ந்து வரும் இஸ்ரேல்- பாலஸ்தீன போர் நிறுத்தம் நடக்கும் என டிரம்ப் அளித்த வாக்குறுதி வீடியோவை பலரும் பார்த்து வருகின்றனர்.
அமெரிக்க மற்ற நாடுகளுக்காக தன்னுடைய ராணுவத்தை இழக்காதுன்றதுதான் ட்ரெம்ப் கொள்கை. pic.twitter.com/NeYuaUEWut
— Qualified MP ⚪️ (@AalenOff) November 6, 2024