ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. இந்நிலையில் காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி செங்காடு என்ற பகுதிக்கு உணவு தேடி வந்தது. இதனையடுத்து மேய்ந்து கொண்டு இருந்த மாடுகளை எதுவும் செய்யாமல் அந்த யானை விவசாய நிலத்தை சுற்றி போடப்பட்ட மின் வேலிக்கு அருகே சென்றது.

பின்னர் முன்னெச்சரிக்கையாக தனது முன்னங்கால் ஒன்றை தூக்கி கம்பி வெளியில் மின்சாரம் பாய்கிறதா? என ஒரு முறைக்கு பலமுறை அந்த யானை சோதனை செய்துவிட்டு கம்பி வேலியை உடைத்து தாண்டி சென்ற காட்சிகளை பார்த்து தோட்டத்தில் வேலை பார்த்திருந்த தொழிலாளர்கள் வியப்படைந்தனர். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.