கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் இருக்கின்றது. இந்த வார்டுகளில் மொத்தம் 6800 குடியிருப்புகளும் 1400 நிறுவனங்களும் இருக்கின்றது. இந்த நகராட்சிக்கு ஐந்து சமுதாய கழிவறை, ஐந்து பொது கழிவறைகளும் இருக்கின்றது. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவு தொட்டி நிரம்பியதும் சுத்தம் செய்யப்பட்டு திறந்தவெளியில் கொட்டப்படுகின்றது.

இதற்கு மாறாக நகராட்சி 6 வார்டில் கழிவு கசடு சுத்திகரிப்பு நிலையம் 1,85,000 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதன் பணிகள் நிறைவடைந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற வருடம் நவம்பர் மாதம் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதற்கான பணிகள் முழுமையாக நிறைவு பெற்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனையின் போது நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் மற்றும் ஆணையர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது சுத்திகரிப்பு நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வருவதாக தெரிவித்தார்கள்.