மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் மேற்கு வீதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் ஜெயக்குமார். பி.இ பட்டதாரியான இவர் தற்போது அங்கிருக்கும் தனியார் கல்குவாரியில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று முன் தினம் தனது சொந்த வேலைக்காக தாராபுரம் வந்துள்ளார். பின் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் இளைஞர் ஒருவரின் இறப்புக்கு செல்வதற்காக தாராபுரம் உடுமலை சாலையில் இருக்கும் காங்கேயம் பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த மினி வேன் ஒன்று ஜெயக்குமார் மீது மோதியதில் இவர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஜெயக்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்கள். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மினி வேனை ஓட்டி வந்த கௌதம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.