கொங்கணாபுரத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. 

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி  அருகே கொங்கணாபுரம் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த 4,850 பருத்தி மூட்டைகள் 1020 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு கூட்டுறவு அலுவலர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது.

இதில் பிடி ரக பருத்தி குவிண்டால் ரூபாய் 7466 முதல் 8779 வரை விற்பனையானது. டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் 7300 முதல் 8559 வரை விற்பனையானது. கொட்டு ரக பருத்தி குவிண்டால் 3500 முதல் 6250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதில் 4850 மூட்டை பருத்தி மொத்தம் 1 கோடியே 30 லட்சத்துக்கு ஏலம் போனது.