பொங்கல் பண்டிகையையொட்டி குற்றச்சம்பவங்களை தடுக்க நெல்லையில் ட்ரோன் மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் பொங்கல் வைப்பதற்காக பொருட்கள், காய்கறிகள், கரும்பு என பல பொருட்களை வாங்குவதற்காக குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் மர்ம நபர்கள் இதை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்காக மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் முக்கிய பகுதிகளில் ட்ரோன் கேமராவை பறக்க விட்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

நேற்று மாலையில் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இதனை போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார். இதை அடுத்து வண்ணாரப்பேட்டை பாலத்தின் கீழ் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்கள். இது பற்றி அவர் அவர் கூறியுள்ளதாவது, பண்டிகை காலத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தங்கள் உடமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். குற்றச்சம்பங்கள் நடப்பதை தடுக்கவே இது போன்ற கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.