நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேனாடு கிட்டட்டிமட்டம் பகுதியில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் அலறி சத்தம் போட்டது. ஆனால் இரவு நேரம் என்பதால் ராணி வெளியே வரவில்லை. மறுநாள் காலை பட்டிக்கு சென்று பார்த்தபோது 7 ஆடுகள் காணாமல் போனதை கண்டு ராணி அதிர்ச்சியடைந்தார். ஒரு குட்டி மட்டும் சிறுத்தை கடித்து குதறிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது அருகில் இருக்கும் தேயிலைத் தோட்டத்தில் மூன்று ஆடுகள் இறந்து கிடந்தது. 4 ஆடுகள் காணவில்லை. எனவே சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் ஆடுகளை இழுத்து சென்றிருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.