தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய ஓபிஎஸ், சுத்தி சுத்தி இதுக்குள்ளேயே வந்துகிட்டு இருக்கீங்க. எங்க சுத்துவீங்களோ மறுபடியும் அங்கேயே வரீங்க.  இப்படி சுத்துனாலும் அங்கே வரீங்க.  நீங்க கேட்டீங்க பாஜகவோடு தொடர்புல இருக்கீங்களா ? என்று…  தொடர்புல இருக்கின்றோம்ன்னு சொல்லுறோம்.  தொடர்பில் உறுதியாக இருக்கிறோம்.

3 மாதமாக நானும், TTVயும் தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறோம். கூட்டணி தொடர்பாக தேர்தல் நேரத்தில் முறையாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வரப்படும்.  பாஜக தேசிய தலைமையுடன் தொடர்பில்இருக்கின்றோம்  என சொல்லியாச்சு. அதற்குப் பிறகு NDA கூட்டணி கூட்டத்தில் கூப்பிட்டார்களா ? இல்லையா என்று கேட்டு ஏன் சண்டையை மூட்டி விட்டுகிட்டே இருக்கீங்க ? எங்களால் கூட்டணி இல்லாமல் தனித்தும் செயல்பட முடியும்.

மீண்டும் NDA கூட்டணி தொடர்பு குறித்து கேள்வி எழுப்பிய உடனே தனது சட்டை பையில் இருந்த செல்போனை தூக்கி காண்பித்த ஓபிஎஸ், இந்த செல்லில் இருக்கின்றது. இன்றைக்கு தேதி வரைக்கும் இருக்கு. நாளைக்கு உங்கிட்ட பேசும்போது அந்த தேதியை காண்பிப்பேன் என தெரிவித்தார். மழை காரணமாக புரட்சி பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்தில் நடத்த வேண்டும் என்று முடிவு பண்ணி பேசி வைத்துள்ளோம் என தெரிவித்தார்.