தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் மதிப்பீட்டு பணிகள் நடத்தப்பட்ட நிலையில் இந்த வருடமும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுய மதிப்பீடு ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த சுயமதிப்பீட்டு பணிகள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பள்ளிகளில் சுய மதிப்பீடு மற்றும் புற மதிப்பீடு செய்வதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வகுப்பறை, நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவற்றை கையாளுதல் குறித்து சுய மதிப்பீடு செய்ய வேண்டும். அந்தந்த வட்டத்தில் உள்ள கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மூலமாக இந்த ஆய்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.