தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய ஓபிஎஸ், மழை காரணமாக புரட்சி பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்தில் நடத்த வேண்டும் என்று முடிவு பண்ணி பேசி வைத்துள்ளோம். மாவட்ட செயலாளர்கள்,  தலைமை கழக நிர்வாகிகள் கூட்டமும்  முடிவு பண்ணி வைத்திருக்கிறோம். தேதி அறிவிக்க இருக்கின்றோம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கின்ற வாக்காளர்கள், வாக்கு சிதறாது. எங்களுக்கு தான் விழும். தொண்டர்கள் எங்க பக்கம் தான் இருக்காங்க. ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்று நாங்க முதல்ல இருந்து அதைத்தான் சொல்லிக்கிட்டே இருக்கிறோம். சேர்ந்தால் தான் ஜெயிக்க முடியும்.

ஒன்றாக சேர்ந்தால் தான் ஜெயிக்க முடியும் என்று நாங்க தான்  சொல்லிட்டு இருக்கிறோம். அவர் கிட்ட போய் கேளுங்க. பழனிச்சாமி கிட்ட போய் கேளுங்க. அவர் முடியாது, முடியாது என்று சொல்லி, இதோடு பத்து தோல்வி ஆகிடுச்சு.  உடனே செய்தியாளர்கள் பிஜேபியுடன் கூட்டணி வைத்தால் தனித்தனத்தில் போட்டியிடுவீர்களா ?  தாமரை சின்னத்தில் போட்டியிடுவீர்களா என்று கேள்வி எழுப்பிய போது, சிரித்து கொண்டு இருந்த ஓ.பன்னீர்செல்வம் அருகில் இருந்த வைத்தியலிங்கம்,  இரட்டை இலையில் போட்டியிடுவோம் என்று தெரிவிக்க… மற்றொரு குரலாக அருகில் இருந்த புகழேந்தி,  இரட்டை இலையில் போட்டியிடுவோம் என்று அழுத்தமாக சொல்ல… சுப்ரீம் கோர்ட் சென்றுள்ளோம். எங்களுக்கு தான் நியாயம் கிடைக்கும்.

சட்ட விதி எங்களுக்கு தான் என்று வைத்தியலிங்கம் சொன்னார். அடுத்தது பேசிய புகழேந்தி, தேர்தல் ஆணையத்தில் அவர்தான் ஒருங்கிணைப்பாளர் என உள்ளது என புகழேந்தியின் சொல்ல, கட்சி அண்ணன் கிட்ட தான் இருக்கு என்று கூறினார். பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து அண்ணே அண்ணே உங்க பர்மிஷன் ஓட பேசுகின்றேன் என சொல்லிய புகழேந்தி,  ஒரு பத்து வருஷம் மாண்புமிகு அம்மாவுக்காக வாதாடி இருக்கேன்.

அவரோட வழக்குக்காக வாதாடி இருக்கேன். அம்மா இறக்கும் போது குமாரசாமி நீதிபதி கொடுத்த தீர்ப்பின்படி,  நிரபராதி என்ற தீர்ப்போடு தான் இறந்தார். அவர் குற்றவாளி என்று நீங்கள் சொன்னது தப்பு. அவர்கள் குற்றவாளி அல்ல. இறக்கும்போதே நிரபராதி என்ற தீர்ப்பை தான் குமாரசாமி  நீதிபதி வழங்கினார் என்று தெரிவித்தார்.