தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,  ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார்கள் அது  உண்மை. அவரை புடிக்கின்றதா ? இல்லையா என்பது வேறு…  நாம் ஒத்துக்கிறோமா,  இல்லையா என்பது வேறு.

கடவுளையோ குறை சொல்லக்கூடிய நாடு. ஹரியானாவில் ஓம் பிரகாஷ் சவுதாலா முன்னாள் முதலமைச்சர்  குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு போனார். லல்லு பிரசாத் யாதவ் பீகாரிலே போனார். அதெல்லாம் நடந்திருக்கிறது. நீங்க எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்…  உள்நோக்கத்தோடு எடுத்துக் கொள்கிறீர்களா ? உண்மை  அப்படியே நிற்கும். அது நீங்க ஒத்துக்கணும். நான் ஒத்துக்கணும் என்ற அவசியம் இல்லை. அம்மா வழக்கில் ஊழல் தீர்ப்பு சரியான சூழ்நிலையில் வழங்கவில்லை என்பது எங்களுடைய கருத்து.

எடப்பாடி தலைமையில் புதிய கூட்டணி அமைப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஒரு பக்கம் இந்தியா கூட்டணி இருக்கிறது. இன்னொரு பக்கம் தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கு. எடப்பாடி கூட இணைவதற்கு எந்த கட்சி வருவார்கள் என்று நினைக்கிறீர்கள்?  என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அருகில் இருந்த வைத்தியலிங்கம், சிரித்துக் கொண்டே,  எடப்பாடி கூட்டணியில் யார் வருவார்கள் என்று ஜோசியம் பார்க்கணும் என்று சொன்னார்.  உடனே அடுத்து பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,  எடப்பாடி கூட யார் வந்தா எங்களுக்கு என்ன ? என தெரிவித்தார்.