சமூக வலைத்தளங்களில் ஒரு பரபரப்பான வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு எதிர்ப்புப் போராட்டத்தின் (Protest) போது, ஒரு அரசியல் தலைவர் தனது ஆதரவாளர்களிடையே உற்சாகம் கூட்ட, தன் மீது பெட்ரோலை ஊற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
ஆனால், எதிர்பாராதவிதமாக அவரது ஆதரவாளர்களில் ஒருவர் அந்தத் தலைவர் மீது தீக்குச்சியைக் (Matchstick) கொளுத்திப் போட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
View this post on Instagram
பெட்ரோலை ஊற்றிய அடுத்த நொடியேத் தீக்குச்சி போடப்பட்டதால், அந்தத் தலைவர் மீது தீப் பற்றிக் கொண்டது. இதனால், ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
உடனடியாகத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துத் தலைவரைக் காப்பாற்றினர். இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், “இனிமேல் தலைவர் எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்ள மாட்டார்” என்று நகைச்சுவையாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
