‘சாகிறவனுக்கு எல்லாமே செய்யத் தோன்றும்’ என்றப் பழமொழிக்கு ஏற்ப, ஒரு மரத்தில் வாழும் தவளை (Tree Frog), தன்னை முழுமையாக விழுங்க முயன்ற ஒரு கொடிய கருப்பு ரேசர் பாம்பின் (Black Racer Snake) பிடியிலிருந்துத் தப்பிக்கும் வீடியோச் சமூக ஊடகங்களில் வெளியாகித் தீயாகப் பரவி வருகிறது.
View this post on Instagram
ஒரு இரும்புக் கதவில் ஒட்டிக் கொண்டிருந்த தவளையின் காலைப் பாம்பு பிடித்துக் கீழே இழுக்க முயன்றது. தவளைக்குத் தப்பிக்கச் சிறிதும் வாய்ப்பில்லை என்று தோன்றிய நிலையில், அதுத் தனது ஒட்டும் பாதங்களின் (Sticky Disc on Paws) முழுத் திறனையும் பயன்படுத்தி, பாம்பு இழுத்தபோதும் கதவைத் தாண்டிக் குதித்து, பாம்பின் பிடியிலிருந்து வெற்றிகரமாகத் தப்பிச் சென்றது.
இந்த வீடியோ, எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கையை விடக் கூடாது என்றப் பாடத்தை அளிப்பதாக நெட்டிசன்கள் தவளையின் துணிச்சலைப் பாராட்டுகின்றனர்.
