சேலம் மாவட்டம் திருவாக்கவுண்டனுரில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ரெண்டு கோடி தொண்டர்களின் உணர்வை மதித்து,  தலைமை கழகத்தின் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் தான் இந்த கூட்டணி விலகல் என்பதை இந்த நேரத்திலேயே தெரிவிக்கின்றேன். இதற்கு ஒரு முற்று புள்ளி வைக்கின்றேன் என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த வரைக்கும் மக்களுக்கு சேவை செய்கின்ற இயக்கம். இன்னும் சில பேர் கேட்கின்றார்கள்…  ஊடக நண்பர்கள் கேட்கின்ற போது, நீங்கள் யார் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லு வாக்கு கேட்பீர்கள் ? என கேட்கிறார்கள். ஒரிசாவில் யார் பிரைம் மினிஸ்டர் என சொல்லியா தேர்தலை சந்திக்கிறார்கள் ?

2019ல கேரளாவில் பிரைம் மினிஸ்டரை முன்னிறுத்தியா அவர்கள் பாராளுமன்ற தேர்தலில் சந்தித்தார்கள். ஏன் தெலுங்கானாவில்,  ஆந்திராவில் பிரைம் மினிஸ்டரை முன்னிறுத்தியா  தேர்தலில் போட்டி போட்டார்கள். இப்படிப்பட்ட மாநிலங்கள் எல்லாம் தங்களுடைய மாநிலத்தின் உரிமைகளை காக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் செயல்பட்டார்கள். அதேபோல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு தமிழக மக்களுடைய உரிமையை காக்க நாங்கள் மக்களை சந்தித்து எங்களுடைய வேட்பாளர்களை வெற்றி பெறுவதற்கு வாக்குகளை கேட்போம் என தெரிவித்தார்.