செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி, விளையாட்டு பிள்ளை சொல்வதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நீங்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஏற்கனவே நான் கூறிவிட்டேன் முழுமையாக நம்பலாம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எப்படி இறுதிவரை நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொன்னதைப் போல அவர்களுடைய தொண்டர்கள்… புரட்சித்தலைவி அம்மாவின் உண்மை தொண்டர்கள்… இன்று பொதுச் செயலாளர் அவர்கள் பல்வேறு வகையில் சிந்தித்து எடுத்த முடிவு.

இந்த முடிவில் மாற்றம் இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். தொடர்ந்து எங்களுடைய கழகத்தினுடைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உடைய தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டு பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எங்களுடைய நிலைப்பாடு தமிழக மக்களுடைய நலன் சார்ந்த நிலைப்பாடு. தமிழக மக்களுடைய நலன். நாங்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு செல்கின்றபோது எங்கள் மனதிலேயே இருப்பவர்கள் தமிழ்நாட்டு மக்கள். 8 கோடி மக்கள் அவர்களுடைய ஜீவாதார உரிமை…  அவர்களுடைய நலன்… இந்த மாநிலத்திற்கு தேவையான நிதி ஆதாரங்கள் பெறுவதில் நாங்கள் முனைப்பாக இருப்போம்.

தேர்தல் காலம் வருகின்றபோது நாங்கள் மேடையிலோ அல்லது இதுபோன்ற விவாதங்களிலோ வருகின்ற நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலே செய்த தவறை நிச்சயம் சுட்டிக்காட்டுவோம். அதே நேரத்தில் அவர்கள் நல்லது செய்தார்கள் என்றால் ? நாங்கள் பாராட்டி விட்டு சென்று விடுகிறோம். அதேதான் சட்டமன்ற – நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சென்றாலும் எப்படி தமிழ்நாடு மக்களுடைய நலனில் அக்கறையோடு நாங்கள் செயல்படுவோமோ அதே போல் தான் எங்களுடைய விமர்சனங்களும் தமிழ்நாடு மக்களின் நலனை இவனை முன்னிறுத்தி தான் எங்களுடைய விமர்சனங்களும் இருக்கும் என தெரிவித்தார்.