
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் உங்க எல்லார்கிட்டயும் ஒன்னு கேக்குறேன்…. நீங்க சொல்றது …. ரசாயன உர ஆளை, தொழிற்சாலைகள் இது எல்லாத்தையுமே நீங்க ஒரு வார்த்தை எங்களுக்கு சொல்றீங்க வளர்ச்சி… ஆங்கிலத்துல டெவலெப்மென்ட்…. நாங்கள் செத்துப் போனதுக்கப்புறம் யாரோட வளர்ச்சி அதுல இருக்கு ? அது யாருக்கான வளர்ச்சியாக இருக்கு ? இந்த முதலாளிகள் எங்கோ தொலைதூரத்தில் இருக்காங்க, அவர்களுக்கான வளர்ச்சி. அவங்களுக்கான பொருளாதார பெருக்கத்திற்கு அது உதவுமா ? எங்களுக்கு என்ன வருது ? பாதுகாப்பு ஆபத்தே இல்ல…..
அது பாதுகாப்பான ஒன்று அப்படின்னா…. அதன் உரிமையாளர்கள், அதில் பணி செய்பவர்கள், அங்கே குடியிருப்பில் குடியிருப்பு கட்டி வாழ தயாராக இருக்கிறார்களா ? இல்ல இல்ல…. அந்த முதலாளி எங்கே ? ஸ்டெர்லைட் முதலாளி எங்கே? மீத்தேன், இத்தேன் எல்லாம் எடுக்குறாங்கள்ள… அவங்க எல்லாம் எங்க ? இந்த சிப்கார்டு தொழிற்சாலை எல்லாம் கொண்டுவராங்கல்ல, அவர் யாரு ?
அந்த தொழிற்சாலைகளை கொண்டு வருவது அரசா ? முதலாளியா ? முதலாளிகளின் லாப தேவைக்கு நீங்கள் உழைக்குறீங்க. ஒரு முதலாளி தங்களின் லாபத்தை தேவைக்கு வருவானா ? இந்த நாட்டு மக்களின் சேவைக்கு வருவானா ? முழுக்க முழுக்க நீங்க முதலாளி லாப தேவைக்கே நீங்க வேலை செய்கிறீர்கள் என்றால், நீங்கள் முதலில் யாரு ? நீங்க தலைவர்களா ? இல்லை தரகர்களா ? என பேசினார்.