
துக்ளக் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி மற்றும் பதில்கள் வழங்கினார்.அதில் பேசிய அவர், அண்ணாமலை எப்போது C.M ஆவார் என்பதை, எப்போது உங்களிடம் சொல்ல வேண்டும் என பாஜக முடிவு செய்யும். எப்பொழுதுமே ஒரு தயாரிப்பு இல்லாத ஒன்று சொல்லக்கூடாது. தயாரிப்புடன் தான் எதையும் செய்ய வேண்டும். 1976 , 1977 என எனக்கு அரசியலில் ரொம்ப நாள் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு.
நான் கண்டது என்னவென்றால், எதற்குமே ஒரு தீவிரமான ஒரு தயாரிப்பு இருக்க வேண்டும். ஒரு கூட்டத்தை கூட்டி, பவரை கையில் எடுத்தால் என்ன ஆகும் ? என்று தமிழ்நாட்டில் திமுக பவருக்கு வந்ததிலிருந்து தெரிந்தது. ஒரு தயாரிப்பு இல்லாத…. அதற்கு ஒரு மனநிலை உருவாகாத…. அதற்கு தியாகம் பண்ணக்கூடிய தொண்டர்படை இல்லாத….
அண்ணாமலையை மட்டும் சீப் மினிஸ்டராக மாற்றி விட்டால் அந்த கட்சிக்கு நல்ல பெயர் வருமா ? கெட்ட பெயர் வருமா ? என்று யாரும் சொல்ல முடியாது. அந்த தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறது பாஜக….. அண்ணாமலை யாத்திரையை அதற்காகத்தான் ஒருவரை முதல்வராக ஆக்குவது மட்டும் ஒரு கட்சியினுடைய நோக்கமாக இருக்கக் கூடாது. அவர் முதல்வராகி அந்த தமிழ்நாட்டிற்கு, அந்த கட்சியால் என்ன நல்லது செய்ய முடியும் என்ற தயாரிப்பும் தேவை என பேசினார்.