உலகம் முழுவதும் whatsapp செயலியை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் ஏராளமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி புது புது எமோஜிகள், அவதார் வடிவிலான எமோஜி, வீடியோ கார்டில் இருக்கும் போதே வாய்ஸ் ஷேர் செய்வது, ஸ்கிரீன் ஷேர் செய்வது என பல வசதிகள் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் வாட்ஸ் அப் போடவே வாட்ஸ் அப் வெப் பயனர்களும் தீமை மாற்றிக் கொள்ளும் அப்டேட் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்னும் சிறப்பாக தீமை மாற்றிக் கொடுக்க வாட்ஸ்அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது ஐபோன் பயனர்கள் ஐந்துவித நிறத்தில் வாட்ஸ் அப் தீமை செட் செய்து கொள்ளலாம். கூடிய விரைவில் எழுத்தின் நிறத்தையும் மாற்றுவதற்கான அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.