2024 ஆம் ஆண்டுக்கான அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையை ஜனவரி 14-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கிரேட் விற்பனையில் பேஷன் முதல் மொபைல், லேப்டாப், டிவி மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்ற லட்சக்கணக்கான பொருட்களில் சிறந்த சலுகைகள் வழங்கப்படும். அமேசான் உறுப்பினர்களுக்கு விசேஷ சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பேஷன் மற்றும் அழகு பேஷன் பொருட்களுக்கு 50 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

மொபைல்கள் மட்டும் துணைக் கருவிகள் மொபைல்களுக்கு 50 முதல் 70% வரை தள்ளுபடி. லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் 40 முதல் 60 சதவீதம் வரை தள்ளுபடி. டிவி மற்றும் டிவி சார்ந்த உபகரணங்களுக்கு 65 சதவீதம் வரை தள்ளுபடி. வீட்டு உபகரணங்களுக்கு ஐம்பது சதவீதம் வரை தள்ளுபடி. எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலமாக ஷாப்பிங் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனை செய்தால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஸ்மார்ட் போன்கள் மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை எக்சேஞ்ச் செய்து புதிய பொருட்களை வாங்கும் போது கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் பொருட்களை வாங்குவதற்கு உங்களுடைய அமேசான் கணக்கில் லாகின் செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் வாங்க விரும்பும் பொருளை தேர்வு செய்து pay என்பதை கிளிக் செய்ய வேண்டும். இறுதியாக உங்களுடைய ஷாப்பிங் காரை சரிபார்த்து செலுத்தவும் என்பதை கிளிக் செய்ய வேண்டும். இந்த விற்பனை இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விற்பனையாகும். எனவே வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொண்டு அற்புதமான சலுகை மற்றும் தள்ளுபடிகளை பெற்று பயனடையுங்கள்.