உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வாட்ஸ் அப் நிறுவனம் வழங்கி வருகிறது. அதன்படி தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 23.10.76 என்ற whatsapp பதிப்பை கொண்டவர்கள் ஒரே மொபைல் எண்ணிற்கு நான்கு சாதனங்களில் whatsapp கணக்கை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் இது ஐஓஎஸ் பயனர்களுக்கு என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதனங்களை இணைப்பதற்காக செட்டிங்ஸ் பகுதியில் இணைப்பிற்கான விருப்பத்தை தேர்வு செய்து க்யூ ஆர் கோடு மூலம் உங்கள் சாதனங்களை இணைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.