ரயிலில் மனைவி நிம்மதியாக உறங்கத் தனது தோளைக் கொடுத்த கணவன், ஒரு கையாலேயே செய்த அந்த ‘வித்தை’ இப்போது நெட்டிசன்களின் ஹாட் டாபிக்.
சமூக வலைதளங்களில் எப்போது என்ன வீடியோ வைரலாகும் என்றே சொல்ல முடியாது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
प्यार तो दोनों से है 🥰 छोड़ नहीं सकता pic.twitter.com/HTnSJ9xgrW
— shweta yadav (@shwetayadav8474) January 23, 2026
ரயிலில் ஒரு தம்பதி பயணம் செய்கின்றனர். மனைவி தனது கணவனின் தோளில் தலை சாய்த்து மிகவும் நிம்மதியாகச் சாய்ந்திருக்கிறார். மனைவியின் தூக்கம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காகக் கணவன் அசையாமல் அமர்ந்திருக்கிறார்.
ஆனால், அதே சமயம் அவருக்குப் புகையிலை (Khaini) போட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. மனைவியை எழுப்பவும் மனமில்லை, புகையிலையை விடவும் மனமில்லை.
உடனே ஒரு கையால் மனைவியைத் தாங்கியபடி, மற்றொரு கையாலேயே லாவகமாகப் புகையிலையைத் தேய்த்துத் தயார் செய்கிறார். இதைப் பார்த்த சக பயணிகள் அவரது ‘மல்டி டாஸ்கிங்’ திறமையைக் கண்டு வியந்து வீடியோ எடுத்துள்ளனர்.
“பாசம் ஒரு பக்கம்.. பழக்கம் ஒரு பக்கம்.. மனுஷன் ரெண்டையும் விடலையே!” என நெட்டிசன்கள் இந்த வீடியோவிற்குத் தங்களது கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர்.
