உத்தரப் பிரதேசத்தின் எடாவா (Etawah, UP) நகரில், சொத்துப் பிரச்சினை காரணமாக ஒரு நபர் தனது அக்கா மற்றும் 3 வயதுக் குழந்தையைச் சுட்டுக் கொன்றச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள்த் தலைமை மருத்துவ அதிகாரி லவ்குஷ் சௌஹானின் மகன் ஹர்ஷ்வர்தன், அவரது அக்கா ஜோதி (40) மற்றும் அவரதுக் குழந்தை தாஷு (3) ஆகிய இருவரையும் சுட்டுக் கொன்றுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக, ஜோதி தனதுத் தந்தையைக் கவனித்துக் கொள்வதற்காகத் தாய் வீட்டிலேயேத் தங்கியிருந்தார்.

ஜோதியின் தந்தை லவ்குஷ் சௌஹான், தனது வீடு மற்றும் விவசாய நிலத்தை ஜோதிக்குப் பெயர்த்து (Transfer) கொடுத்ததால், ஹர்ஷ்வர்தன் கடும் கோபமடைந்தார்.

இதுவே இருவருக்கும் இடையே அடிக்கடிச் சண்டைகள் வரக் காரணமாக இருந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தச் சண்டையின்போது, ஹர்ஷ்வர்தன் தனது இரு மகன்களுடன் அறைக்கு வந்து துப்பாக்கியால் சுட்டதாக, ஜோதியின் கணவர் ராகுல் போலீஸில் தெரிவித்துள்ளார்.

சத்தம் கேட்டு ஓடி வந்தக் குடும்பத்தினர், தாயும் மகளும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஹர்ஷ்வர்தனைத் தேடி வருகின்றனர்.