தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை மீரா மிதுன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். கடந்த 2021-ம் ஆண்டு பட்டியல் இனத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய காரணத்திற்காக நடிகை மீரா மிதுன் மற்றும் அவருடைய நண்பர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த மீரா மிதுன் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மீரா மிதுன் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் நடிகர் விஜய்யை ஒருமையில் மீரா மிதுன் மோசமாக பேசியுள்ளார்.

அதாவது மீரா மிதுனை நடிகர் விஜயுடன் ஒப்பிட்டு பேச இதனால் கடுப்பான மீரா மீதுன் கெட்ட வார்த்தையில் பேசினார். ஆனால் நெறியாளர் விஜய் மிகப்பெரிய ஸ்டார் என்று கூறுகிறார். அதற்கு மீரா மிதுன் அவன் பெரிய ஸ்டாரா இருந்து என்ன கிழிச்சிட்டான். நானும் அவனும் ஒண்ணா. அவன் படம் எல்லாமே பிளாஃப் தான். அவனை நேஷனல் மற்றும் இன்டர்நேஷனல் அளவில் யாருக்குமே தெரியாது என்று மோசமாக பேசியுள்ளார். மேலும் மேலும் பேசிய இந்த பழைய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.