தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் நரேஷ். இவர் நடிகர் மகேஷ்பாபுவின் அண்ணன் ஆவார். இவரும் நடிகை பவித்ராவும் காதலித்து வந்த நிலையில் நேற்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

நடிகர் நரேஷுக்கு தற்போது 60 வயது ஆகும் நிலையில் ஏற்கனவே 3 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இதேபோன்று நடிகை பவித்ராவும் திருமணமாகி ஏற்கனவே விவாகரத்து பெற்றவர் தான். நடிகை பவித்ராவுக்கு தற்போது 44 வயது ஆகிறது. மேலும் நரேஷ் மற்றும் பவித்ராவின் திருமண வீடியோவை நரேஷ் தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.