தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், சுனில் மற்றும் நடிகை தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் மேக்கிங் வீடியோவை தற்போது சன் நெக்ஸ்ட் தளத்தில் அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களைக் கவர்ந்து சோசியல் மீடியாவில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

https://twitter.com/kadalaimuttaai/status/1634230816678240256?s=20