தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித். இவர் துணிவுப் படத்திற்கு பிறகு ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. தற்போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் அஜித் விமான நிலையத்திற்கு வந்த போது ரசிகர் ஒருவர் அவருடன் செல்பி எடுத்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் கிளீன் ஷேவ் செய்துவிட்டு உடல் எடையை குறைத்து கூலான லுக்கில் இருக்கிறார். மேலும் நடிகர் அஜித் ஏகே 62 திரைப்படத்திற்காக தான் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தால் தற்போது ஏகே 62 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில் விரைவில் அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.