தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படங்கள் கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி ரிலீசானது. இந்த 2 திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது. இந்நிலையில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் வசூல் நிலவரம் குறித்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, துணிவு மற்றும் வாரிசு தயாரிப்பாளர்கள் இரண்டு பேருமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். படம் பார்த்த ரசிகர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எனவே நாம் வாரிசு மற்றும் துணிவு படங்களின் வசூல் நிலவரம் பற்றி தெரிந்து என்ன செய்யப் போகிறோம். நாம் அதில் ஏதாவது பணம் போட்டிருக்குமா.? இல்லையெனில் நமக்கு ஏதாவது பணம் வரப்போகிறதா. பின் எதுக்கு வசூல் நிலவரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் வசூல் நிலவரம் குறித்து இப்படி ஒரு பதிலை சொன்னது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.