சமூக வலைதளங்களில் தினமும் எத்தனையோ வினோதமான வீடியோக்களைப் பார்க்கிறோம். ஆனால், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு போலி பல் மருத்துவர் செய்யும் காரியம் உங்களை ஆச்சரியத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்லும். கராச்சியின் வீதியோரம் அமர்ந்திருக்கும் அந்த நபர், மிகவும் குறைந்த செலவில் பற்களைச் சீரமைப்பதாகக் கூறி ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், அந்த நபர் ஒரு சாதாரண துருப்பிடிக்காத எஃகு ஸ்பூனில் வெள்ளை நிறப் பேஸ்ட் ஒன்றை நிரப்புகிறார். பின்னர், அதை அப்படியே நோயாளியின் வாய்க்குள் திணித்து பற்களில் ஒட்ட வைக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Ali Abdullah (@aliabdullah_durrani)

இப்படிச் செய்தால் பற்கள் இரும்பு போல வலுவாக இருக்கும் என்றும், முத்துப்போல மின்னும் என்றும் அவர் அடித்து விடுகிறார். இதைப் பார்த்தால் பல் டாக்டரிடம் சிகிச்சை பெறுவது போல இல்லை, ஏதோ வீட்டின் சுவருக்கு ‘புட்டி’ (Putty) பார்ப்பது போலவே இருக்கிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஸ்டாண்ட்-அப் காமெடியன் அலி அப்துல்லா இந்த வீடியோவைப் பகிர்ந்து கலாய்த்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இவர் டாக்டரா இல்ல பெயிண்டரா?”, “ஒருவேளை முன்னாடி பிரியாணி கடை வச்சிருந்தாரோ?” எனச் சரமாரியாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.