பீகார் மாநிலம் பட்னாவிலிருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இதில், ரயிலின் ஏசி பெட்டியில் டிக்கெட் இன்றி பயணம் செய்த பெண் ஒருவரை டிடிஇ கண்டுபிடித்து, அவர் திரும்பத் திரும்ப டிக்கெட் கேட்க, “நீங்கள் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்” என பதிலளிக்கிறார். அதற்கு டிடிஇ, ” ஆசிரியர் நீங்க, ஆனா டிக்கெட் இல்லாம ஏசி பெட்டில போறீங்க” என திட்டியதாக வீடியோவில் காணப்படுகிறது.

 

அந்த பெண் தொடர்ந்து ஒரு அதிகாரியை போல் நடித்து, மொபைலில் யாரையோ தொடர்பு கொண்டு, இடத்தை விட்டு செல்ல மறுக்கிறார். டிடிஇ வாதத்தை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் போது, பெண் ஒருவர் அவரது கைபேசியை பிடித்து, “ஒரு பெண்ணை இப்படித் பதிவு செய்ய முடியாது” என கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

அதையடுத்து, நீண்ட நேர விவாதத்திற்கு பிறகு, பெண் “பயனற்றவர்” என டிடிஇயை கேலி செய்ய, அமைதியாக இருந்த டிடிஇ கோபமடைந்து, “பயனற்றது நாங்க இல்ல, நீங்க தான்” என பதிலடி கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி 1.8 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.