சமூக வலைதளத்தில் தற்போது வயலாகும் ஒரு வீடியோ மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அந்த வீடியோவில் சாலையில் செல்லும் ஒரு லாரியை ஸ்கூட்டியில் வந்த நபர் வேகமாக சென்று முந்த முயற்சித்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கீழே விழுந்துவிட்ட நிலையில் அவரைத் தாண்டி லாரி சென்றது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு எதுவும் ஆகவில்லை.
“जाको राखे साइयां मार सके न कोय”
काकीनाडा में बड़ा हादसा…सीमेंट मिक्सिंग ट्रक के नीचे आने के बाद भी चमत्कारिक रूप से बचा बाइकर#AndhraPradesh pic.twitter.com/koFhAa04Af
— Gurutva Rajput 🇮🇳 (@GurutvaR) October 7, 2025
அதே நேரத்தில் அவரது ஸ்கூட்டியை லாரி சில மீட்டர் தூரம் இழுத்துச் சென்றதால் அது பயங்கரமாக சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் ஸ்கூட்டி ஓட்டி சென்றவர் பெயர் நரேந்திரா என்பது தெரியவந்துள்ளது. அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
