சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இருசக்கர வாகன உருமாற்றக் காணொளி ஒன்று வாகன ஆர்வலர்களைப் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடக்கத்தில் சாதாரண மோட்டார் சைக்கிள் போலச் சாலையில் செல்லும் இந்த வாகனம், முன்பக்கத்திலிருந்து பார்க்கும்போது முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தைக் கொண்டுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Prashant Dubey (@iprashant._)

அந்த வாகனத்தின் எரிபொருள் தொட்டியுடன் இணைக்கப்பட்ட கைப்பிடிப் பகுதியைத் தனியாகப் பிரித்து, அதற்கு இணையாகப் பக்கவாட்டில் நான்கு பேர் அமரக்கூடிய வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாகனத்தின் நிலைத்தன்மைக்காகப் பின்புறம் கூடுதல் சக்கரம் பொருத்தப்பட்டு ஒரு சிறிய ரக வாகனம் போல இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொளி இதுவரை ஆறு கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதுடன், இந்தியர்களின் இத்தகைய வினோதமான கண்டுபிடிப்பு மற்றும் விடாமுயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.