கர்நாடக மாநிலத்தின் கட்டுமான இடங்களில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ள ஒரு பெண்ணின் மர்மமான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் தேடுதலையும் ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது பயணத்தின் போது நெடுஞ்சாலைகளிலும் நகரங்களிலும் உள்ள புதிய கட்டுமானங்களில் பெரிய கண்களுடன் சேலை அணிந்த ஒரு பெண்ணின் படம் அடிக்கடி இடம்பெற்றிருப்பதைக் கவனித்தார்.
I see this woman everywhere in Karnataka outside bangalore where there’s a construction happening. I tried google lens to check for discussions but can’t find any details. Who is she? pic.twitter.com/RAgMDXXJMt
— unc unitechy (@unitechy) January 5, 2026
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து அந்தப் புகைப்படம் சுமார் முப்பது லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டு வைரலானது. விசாரணையில் அந்தப் படத்தில் இருப்பவர் கர்நாடகாவைச் சேர்ந்த நிஹாரிகா ராவ் என்ற யூடியூபர் என்பதும் கடந்த இரண்டாயிரத்தி இருபத்தி மூன்றாம் ஆண்டு வெளியான அவரது காணொளியின் ஒரு பகுதி மீம்ஸாக மாறிப் பிரபலமானதும் தெரியவந்தது.
தற்போது அந்தப் புகைப்படம் தீய சக்திகளிடமிருந்து புதிய கட்டிடங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் நவீன திருஷ்டி பொம்மையாக உள்ளூர் மக்களால் மாற்றப்பட்டுள்ளது.
