திருமணத்தின் போது தனது மகளின் எடை அளவிற்கு தங்கம் சீர்வரிசையாக கொடுத்த பாசக்கார அப்பாவின் செயல் அனைவரையும் வாய்ப்பு பிளக்க செய்துள்ளது. துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மகளின் திருமணத்தின் போது சீர்வரிசையாக எடைக்கு எடையாக தங்கம் கொடுத்து அசத்தியுள்ளார்.

பிரம்மாண்ட தராசில் ஒருபுறம் மணப்பெண் அமர்ந்திருக்க திருமண நிகழ்ச்சிக்கு தங்க கட்டிகளை சுமந்து வந்த உறவினர்கள் தட்டுகளில் தங்க கட்டிகளை அடுக்கினர். திருமணத்திற்கு வந்தவர்கள் இதனை திகைப்புடன் பார்த்தார்கள். மகளின் எடைக்கு எடையாக தந்தை 70 கிலோ தங்கத்தை சீர்வரிசையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் இது மணப்பெண்ணா இல்லை பொன்னா என கமெண்ட் செய்து வருகின்றனர்.