பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்து அவர்களுக்கு தேவையான பாதுகாப்பினையும் வசதியினையும் தடை இன்றி செய்து வரும் நாடாக பாகிஸ்தான் உள்ளது என ஐநாவுக்கான இந்திய தூதர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது “மோதல் மற்றும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஒரே வழி சமாதானம் மட்டும் தான். மேலும் விரும்பத்தகாத ஆத்திரமூட்டம் சம்பவங்கள் வருந்தத்தக்கது. மேலும் அது தவறானது. அதோட பாகிஸ்தானின் பிரதிநிதிக்கு நாங்கள் வழங்கும் அறிவுரை என்னவென்றால் “கடந்த காலத்தில் நாங்கள் செய்த ஏராளமான சம்பவங்களை கூறலாம். மேலும் ஐ.நா சாசனத்தின் கொள்கைகளை இந்தியா நிலை நிறுத்தியது.

இந்தியா எப்போதும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தை மட்டுமே பிரயோகிக்கும்” என்று அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து உக்ரைநிலிருந்து ரஷ்யா வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகளும், எதிராக 7 நாடுகளும் வாக்களித்தது. அதோடு சீனா, இந்தியா உட்பட 32 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தும் உள்ளது. இது தொடர்பாக இந்திய தூதர் கூறியதாவது “தற்போது நடக்கும் தீர்மானத்தின் நோக்கங்களாவது நிலையான அமைதியை பாதுகாப்பான முறையில் அடைவதையே ஆகும். இதனை நாங்கள் கருத்தில் கொண்டதால், இந்த வாக்கெடுப்பை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.