உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி இன்றோடு ஒரு வருடத்தை எட்டி உள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்து வருகின்றன அதோட அந்த நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளையும் இராணுவ உதவிகளையும் வணங்கி வருகின்றது. மேலும் ரஷ்யாவிற்கு எதிராக அந்நாடுகள் பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.

இந்த போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சித்து வந்தாலும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவால் போர் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்த நிலையில் ரஷ்யப்படைகள் உடனடியாக உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் என ஐநா சபையில் இன்று தீர்மானம் முன்னெடுக்கப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 141 நாடுகள் ஆதரவாகவும் 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளது. அதோடு சீனா, இந்தியா உள்ளிட்ட 32 நாடுகள் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நிராகரித்துள்ளது. இதனால் 141 நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களித்ததால் இந்த தீர்மானம் உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது.