ஐக்கிய அரபு அமீரகம், சூடான், மொராக்கோ, பக்ரைன் போன்ற அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிலவி வந்த மோதல் மெல்ல மெல்ல தனித்துள்ளது. இதனால் அந்நாடுகளுடன் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தமும் தூதரக உறவையும் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான உறவு சமூகமாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

இதனை அடுத்து இஸ்ரேல் விமானங்கள் தங்கள் நாட்டு வான் பரப்பு வழியாக செல்ல சவுதி அரேபியா அரசு கடந்த ஜூலை மாதம் அனுமதி அளித்தது. இதனால் ஓமனும் தங்களுடைய வான் பரப்பின் மீது இஸ்ரேல் விமானங்கள் செல்ல அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் ஓமனும் இஸ்ரேலும் தூதரக ரீதியாக உறவை மேம்படுத்து வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகின்றது. இந்த முடிவினால் இஸ்ரேல் இந்தியா இடையேயான விமான போக்குவரத்து சுமார் 2 மணி நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.