துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 தேதி அதிபயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் தற்போது வரை 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதோடு ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் தரைமட்டமாகியுள்ளது. மேலும் 13 நாட்களாக நடைபெற்ற மீட்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களில் நொடிப்பொழுது சரிந்து விழுந்த கட்டிடங்கள் தொடர்பாக துருக்கி அரசு பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி உறுதியற்ற மற்றும் சட்டவிரோதமாக கட்டிடங்களை கட்டிய ஒப்பந்ததாரர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக கட்டிட ஒப்பந்தக்காரர்கள் 171 பேருக்கு துருக்கி அரசு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் 171 பேரும் உடனடியாக கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.