பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  பிஜேபி கட்சி மூன்றாவது முறை ஆட்சிக்கு வரவேண்டும் என்று,  நான் ஆட்சி கட்டிலில் அமர்வதற்காக…. அந்த சுகத்தை அனுபவிப்பதற்காக சொல்லவில்லை.  நான் நாட்டின் கோடிக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கைக்காக வாழ்கிறேன். இந்த நாட்டில் உள்ள ஏழை – எளிய மக்களின் கனவு,  பெண்களின் கனவு, ஏழை குழந்தைகளின் கனவு தான் மோடியின் கனவு.

இந்த கனவை  நிறைவேற்றுவதற்காக தான் நாம் அனைவரும் சேவை மனப்பான்மையோடு பகல் – இரவு பார்க்காமல் வேலை செய்கிறோம்.  இது ஒரு தங்கும் இடம்,  முகாம். ஆனால் நம்முடைய இலக்கை அடைவதற்கு ஒரு வழி. கோடிகணக்கான பாரதவாசிகளின் கனவை  நிறைவேற்ற வேண்டும். அதற்காக செய்ய வேண்டிய பணிகள் அதிகமாக இருக்கிறது. இளைஞர்களின் திறன், பெண்களின் திறன், ஏழைகள் –  விவசாயிகளின் தனித்திறன் இவற்றை மீண்டும் நிலை நிறுத்த வேண்டும்.

முன்பு மக்கள் யோசித்தார்கள், ஆட்சிகள் மாறுகின்றன. ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் மாறவில்லை என்று நினைத்தார்கள்…  ஒவ்வொரு விஷயத்திலும் பழைய எண்ணங்கள்,  பழைய நடைமுறைகளை நான் மாற்றி இருக்கிறேன். ஆதிவாசிகளில் மிகவும் பின் தங்கிய வகுப்பினருக்கு வேறு யாரும் செய்யாத பணிகளை எல்லாம் நாம்  செய்திருக்கின்றோம்.

விஷ்வகர்மா மக்களுக்காக பிரதம மந்திரியின் விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கி  இருக்கின்றோம்.  சாலையோர வியாபாரிகளுக்காக பிரதமரின் சுயநிதி திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். இதற்கு முந்தைய அரசாங்கங்கள் பெண்களின் கஷ்டங்கள் பற்றி யோசிக்கவில்லை,  பெண்களின் நிலையை உயர்த்துவதற்காக சமூக அளவில் பணிகளை செய்திருக்கின்றோம். சட்ட அளவிலும்  பணிகளை செய்து இருக்கின்றோம் என தெரிவித்தார்.