பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஒருங்கிணைப்பு கூட்டத்திலே வந்து சேர்ந்திருக்கின்ற… நாட்டின் மூளை முடுக்குகளில் இருந்து எல்லாம் வந்திருக்கின்ற பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களை அன்புடன் வரவேற்கிறேன். நம்முடைய கட்சித் தொண்டர்கள் அனைத்து நாட்களிலும்,  வருடத்தின் அனைத்து நாட்களிலும் எப்போதும் ஏதாவது ஒரு வேலையில்  இருக்கிறார்கள். 

ஆனால் அடுத்த 100 நாட்களில் புதிய சக்தி, புதிய உற்சாகம்,  புதிய ஆர்வம்,  புதிய நம்பிக்கை புதிய சக்தியோடு வேலை செய்ய வேண்டிய நேரம். இன்று பிப்ரவரி… இந்த  காலத்தில் 18 வயது நிரம்பிய இளைஞர்கள் 18 ஆவது லோக்சபா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.  அடுத்த நூறு நாட்கள் நாம் அனைவருக்கும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு புதிய வாக்காளர்களையும் நாம் சென்றடைய வேண்டும்.

ஒவ்வொரு பிரிவு, ஒவ்வொரு சமூகம், ஒவ்வொரு கலாச்சாரம், அனைவரிடத்திலும் நான் செல்ல வேண்டும். அனைவரின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும். அனைவரின் முயற்சி இருக்கும் போது நாட்டின் தேவைக்காக…  அதிகமான சீட்டுக்கள் பிஜேபி கண்டிப்பாக பெறும் . இங்கே பதான் அதிகாரிகளோடு நான் அமருகின்ற வாய்ப்பு  எனக்கு கிடைத்தது.  பாஜக பொறுப்பாளர்களின் உடைய கூட்டத்தில் நான் இருந்தபோது…

ஆட்சியில் இருக்கும் போது கூட இந்த   தலைவர்கள் எல்லாம் மக்களிடத்திலே எத்தகைய சேவைகளை எல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை பார்த்து நான் வியந்து போனேன்.  இரண்டு நாட்களில் இங்கே நடந்த விவாதங்கள்,  நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தின் மீது  நம்முடைய நம்பிக்கையை அதிகரித்து இருக்கின்றது.  நட்டா  அவர்களின் மூலமாக இங்கே வந்திருக்கின்ற  நாடு முழுவதும் இருக்கின்ற பிஜேபி கட்சி உறுப்பினர்களுக்கு நான் வணக்கம் தெரிவித்துக் கொள்கின்றேன்.