
செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அனைவருக்கும் வணக்கம்… மாண்புமிகு தமிழக முதல்வர் அன்பிற்கினிய தளபதி அவர்கள் பொறுப்பேற்று, முகநூல் வாட்ஸ்அப்களில் பரப்பப் படுகின்ற அவதூறுகளையும், இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட 1959ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் சாதிக்காத… கண்டிடாத சாதனைகளை இந்த முப்பது மாதங்களில் அளவிட முடியாத அளவிற்கு…. ஒவ்வொரு நிகழ்வுகளையும், முந்தைய நிகழ்வுகள் முடியடித்து வெற்றிகரமாக அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகின்ற தருவாயில்…. கோயபால் தத்துவத்தின்படி,
ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்லுகின்ற பொழுது அதுவே உண்மையாகி விடக் கூடாது என்பதற்காகவும், கலங்கமதிப்படுத்தவர்கள் பரப்புகின்ற அவதூறுகளுக்கு இந்த துறை ஆற்றி இருக்கின்ற ஒரு சில சாதனைகளை மாத்திரம் பத்திரிக்கையாளர், ஊடகத்தினரிடையே எடுத்துக் கூறுவது என்று முடிவு செய்யப்பட்டு, துறையினுடைய செயலாளர் மணிவாசகம் அவர்களும்,
துறையின் உடைய சிறப்பு அலுவலர் அன்பிற்கினிய குமரகுருபரன் அவர்களும், துறையின் உடைய ஆணையாளர் முரளிதரன் அவர்களும், துறையினுடைய கூடுதல் ஆணையாளர் அவர்கள் சங்கர் ஐ.ஏ.எஸ் அவர்களும், கூடுதல் ஆணையாளர்கள் திருமகள் அவர்களும், ஹரிப்பிரியா அவர்களும் கூட்டாக சேர்ந்து இன்றைக்கு பத்திரிக்கையாளர்களை சந்திப்பது என்று முடிவெடுத்து உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம் என தெரிவித்தார்.