செய்தியாளர்களிடம் பேசிய தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,  பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றால் பாஜக வெற்றி பெறாது என ஓபிஎஸ் சொன்னது அவருடைய கருத்து. அவருடைய கருத்திற்கு பதில் அவங்க கிட்ட கேளுங்க. தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் ? யார் வெற்றி பெறவில்லை என்பதை தீர்மானம் செய்பவர்கள் மக்கள்தான்.

அதனால் அவங்க அவங்க கட்சிக்கு சார்பாக அவங்கவங்க ஒரு கருத்து சொல்லுவாங்க.  கடைசியில் யார் எஜமானர்கள்…  மக்கள் தீர்ப்பே  மகேசன் தீர்ப்பு என்பது தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும். ADMK, BJP பிரண்ட்லியா எல்லாரும் பேசிட்டு தான் இருக்காங்க.  கூட்டணியில் இன்னைக்கு  யாருடனும் கூட்டணியில் இல்லை. ஆனால் நட்பு ரீதியாக அனைவருமே எங்க கிட்ட பேசிட்டு இருக்காங்க. நாங்களும் எல்லாரோடும் பேசுறோம்.

ஆனால் யாருடன் கூட்டணி அப்படிங்கிற இறுதி அறிவிப்பு… எந்த தொகுதி ? யார் வேட்பாளர் ? என்பதை தலைவர் அவர்கள் தான் ஜனவரி மாதத்தில் அறிவிப்பார். அதுவே அதிகாரப்பூர்வமான அறிவிப்பு. இறுதி அறிவிப்பு என்று நான் சொல்லியிருக்கிறேன்.

கூட்டணி பத்தி பேச்சு வார்த்தை இன்னும் யாரும் ஆரம்பிக்கல. ஏன்னா இன்னும் எந்த கட்சியிலையும் ஆரம்பிக்கல. தேமுதிக மட்டும் கிடையாது,  இன்னைக்கு திமுக கூட்டணி ஒரு கூட்டணி அமைச்சு அதுல பயணிக்கிறாங்க…  மத்த கட்சிகளும்,  மத்த கூட்டணியும் இன்னும் எதுவுமே இறுதி செய்யப்படவில்லை. அந்த மாதிரி பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கல என தெரிவித்தார்.