அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு தாளுக்கு 150 ரூபாயாக இருந்த தேர்வு கட்டணம் 225 ரூபாயாகவும், டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு ஒன்பது தாழ்வுகள் எழுத வேண்டி உள்ளதால் 2050 ரூபாய் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த புதிய கட்டண உயர்வானது அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்றும் இந்த ஆண்டு பழைய தேர்வு கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் வரும் காலங்களில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.