ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை நெருங்கும் பச்சைவால் நட்சத்திரம் பூமியிலிருந்து 26 மில்லியன் மைல் தொலைவில் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. இந்த பச்சை வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி வருவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டுபிடித்தனர். இந்த வால் நட்சத்திற்கு சி-2022 #3 என்று பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் பச்சை வால் நட்சத்திரம் வருகின்ற பிப்ரவரி 1,2-ம் தேதிகளில் பூமிக்கு மிக அருகில் வந்து கடந்து செல்லும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனை வெறும் கண்களாலும் பைனாப்குலராலும் இரவிலும் பகலிலும் பார்க்க முடியும் என்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த பச்சை நிற வால் நட்சத்திரம் 2022 ஆம் ஆண்டு பூமியை நோக்கி பயணிப்பதை கண்ட நாசா விஞ்ஞானிகள் இம்மாத இறுதியிலேயே பூமியை நெருங்கிவிடும் என்றும் கணித்துள்ளனர், இதனால் வால் நட்சத்திரத்தை பார்ப்பதற்காக இப்போதே பலரும் பைனாகுலரும் கையுமாக சுற்ற தொடங்கியுள்ளனர்.