ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நபர் செரோ என்ற சாஃப்ட்வேர் கம்பெனியில்யின் முதலாளியாக இருந்து வருகின்றார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும்போது தன்னுடைய வித்தியாசமான பணியாளர்களை தேர்வு செய்த முறையை பற்றிய ரகசியங்களை பகிர்ந்துள்ளார். ஒருவர் காபி கப் மூலம் தன்னுடைய நடத்தை எவ்வாறு வெளிப்படுத்தகின்றார் என்பதை மிக எளிதாக கட்டறிந்து அவர்களுக்கு வேலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அதாவது திறமையுள்ள ஆர்வம் உள்ள நபர் யாரேனும் நேர்காணலின் போது கண்டால் அவரை காபி குடிப்பதற்காக அலுவலகத்தில் சமையல் அறைக்கு அழைத்துச் சென்றாராம். இதன்பின் இருவரும் காபி குடித்து முடித்ததும் நேர்காணலுக்கு வந்திருந்த நபர் தன்னுடைய காபியை தானே கிச்சனுக்கு எடுத்துச் செல்ல விருப்பம் காட்டினாலோ அல்லது எடுத்துச் சென்றாலோ அவர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவேளை குடித்த காபி கப்பை அப்படியே வைத்து விட்டு சென்றால் அவ்வளவு தான் உங்களுக்கு வேலை கிடையாது.
இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான முறையில் மூலம் பலரை அவர் தெரிவித்துள்ளார். அவரை பொறுத்தவரை ஒரு காபி கப்பை தானே சுத்தம் செய்கின்றார் என்றால் அவர்கள் தன்னுடைய திறமைகளையும் அறிவாற்றலையும் நல்லதொரு அனுபவத்தையும் சிறப்பாக பெற முடியும். அதே சமயம் இது வெறுமனே காபி கப்பை சுத்தம் செய்வது மட்டுமல்ல. ஒருவரின் குணாதிசியம் முதலீட்டவற்றை குறிப்பதாகும்.
ஒருவர் தன்னுடைய காபி கப்பை தானே சுத்தம் செய்கின்றார் என்றால் அவர் மிக பணிவான அவப்பாக இல்லாத நபராக இருப்பார். இது போன்ற சிறிய சிறிய விஷயங்கள் தான் ஒரு மதிப்பை உருவாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நேர்காணலுக்கு வரும் நபர்கள் தன்னுடைய காபி கப்பை தாமே சுத்தம் செய்ய வேண்டும் என்பது இதனுடைய நோக்கம் அல்ல. இதன் உண்மையான நோக்கமே ஒருவரால் தன்னுடைய வேலையை தானே செய்ய முடியுமா? அந்த அளவிற்கு அவர் படைத்தவரா என அறிவது தான் என அவர் கூறியுள்ளார்.