காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூர் பகுதியில் இருந்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த பகுதியில் வசித்து வரும் டில்லிபாபு மற்றும் அவரது சகோதரர் சங்கர் ஆகியோர், இன்று அதிகாலை நேரத்தில், வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இருந்து வரும் சத்தமான பாடல்களால் அவதிப்பட்டு, அந்த இளைஞர்களிடம் சத்தத்தை குறைக்குமாறு கேட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் சின்னதாகத் தோன்றிய முரண்பாடு, அடுத்த நிமிடமே கொடூரமான வன்முறையாக மாறியுள்ளது. கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் அந்த இளைஞர்கள், ஆத்திரத்தில், இரு சகோதரர்களையும் அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் இருவரும் கடுமையாக காயமடைந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குற்றம் செய்து தப்பியோடிய இளைஞர்களை பிடிக்க சிறப்பு படையினரை நியமித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.