துருக்கி நாட்டிற்கு சென்ற பிரிட்டன் சுற்றுலா பயணிகளான 51 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

பிரிட்டன் மக்கள் விரும்பி செல்லும் சுற்றுலா தளம் துருக்கி ஆகும். எனினும், கடந்த வருடத்தில் அங்கு சென்ற பிரிட்டன் பெண்கள் 51 பேர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகினார்கள். கோடை விடுமுறையில் பிரிட்டன் மக்கள் சென்று தங்கக்கூடிய கடற்கரையோர சுற்றுலா தலங்களிலும் ரிசார்ட்களிலும் தான் அதிகமாக பாலியல் சம்பவங்கள் நடக்கின்றன.

மேலும், வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்களும் அங்கு அதிகமாக நடக்கின்றது. இந்நிலையில், பிரிட்டன் வெளியுறவு அலுவலகமானது, தங்கள் மக்களுக்கு ஆலோசனைகளை அளித்திருக்கிறது. அதன்படி பெண்களை பகல் நேரங்களில் சந்திக்கும் சில நபர்கள் தான் இரவில் அவர்களிடம் அத்து மீறுகிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது.

யாராவது, தங்களின் வாகனத்தில் லிப்ட் கொடுத்தால் அதில் ஏற வேண்டாம் எனவும் மஞ்சள் நிறத்திலான டாக்ஸிகளில் மட்டும் பயணிக்க வேண்டும். அந்த வாகனங்களின் எண்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறது. மேலும் அளவுக்கு அதிகமாக மது அருந்தக்கூடாது எனவும் பிறரிடமிருந்து எந்த பானங்களையும் வாங்கி அருந்த வேண்டாம்.

அதில் மயக்க மருந்துகள் கலந்திருக்கலாம் என்று எச்சரித்திருக்கிறது. இது மட்டுமல்லாமல், தங்கும் விடுதிகளில் கடவுச்சீட்டுகளும் திருடப்படும். எனவே, துருக்கிக்கு சுற்றுலா செல்பவர்கள் இவை அனைத்தையும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் அதிகாரிகளை அணுகலாம் என்று தெரிவித்திருக்கிறது.