நியூசிலாந்து நாட்டு பிரதமராக இருந்து வந்த ஜெசிந்தா ஆர்டெர்ன், தன் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஜனவரி 19ஆம் தேதி நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் கூட்டத்தின்போது ஜெசிந்தா கூறியதாவது “இனி இந்த பதவியில் தொடர என்னிடம் போதிய அளவு ஆற்றல் இல்லை. அடுத்த மாதம் நான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறேன்.

இது கடினமான வேலை என்று எனக்கு நன்றாக தெரியும். எனினும் நாமெல்லாம் மனிதர்கள் தான். என்னால் முடிந்தவரையிலும் பணிபுரிந்துள்ளேன். எனவே இது ராஜினாமா செய்ய வேண்டிய நேரமாக நினைக்கிறேன். தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால் பதவி விலகவில்லை. கண்டிப்பாக தேர்தலில் எங்களது கட்சி வெற்றி பெற முடியும் என நம்புகிறேன். அதே நேரம் நான் அதில் போட்டியிடப்போவதில்லை” என ஜெசிந்தா பேசி இருந்தார்.