நடந்து களைத்துப்போகும் அளவிற்கு நீளமான ரயில் நடைமேடை உலகில் இருக்கிறது. முக்கியமாக இந்த ரயில் நடைமேடை இந்தியாவில் அமைந்திருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம் ஆகும். உலகின் நீளமான ரயில்வே பிளாட்பார்ம் எங்கு இருக்கிறது என்பதும், அதில் நடந்தால் சோர்வு தான் மிஞ்சும் என்பதும் இந்தியாவின் அதிசயங்கள் ஆகும்.

நமது நாட்டில் தினசரி கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். உலகிலேயே மிகப் பெரிய ரயில் நடைமேடை உத்தரபிரதேசம் கோரக்பூர் மாவட்டத்திலுள்ள கோரக்பூர் சந்திப்பு ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் 1 மற்றும் பிளாட்பார்ம் எண்.2 போன்றவை உலகின் மிக நீளமான நடைமேடைகளாகும். இந்த பிளாட்பாரம் ஒன்றரை கி.மி நீளம் கொண்டது.